செய்திகள்
ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி விட்டு வெளியே வந்த காட்சி.

ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Published On 2019-10-19 10:45 GMT   |   Update On 2019-10-19 10:45 GMT
ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி:

திருச்சி ஸ்ரீரங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், ஏராளமான தொகைகள் கணக்கில் வராமல் கை மாறுவதாகவும் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தது. அது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தகவல்கள் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல்,நவநீத கிருஷ்ணன், சேவியர் மற்றும் போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கணக்கில் வராத ரூ.1.31 லட்சம் அலுவலகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அது தொடர்பாக சார்பதிவாளர் ராஜேந்திரன் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.1.31 லட்சம் பணம் எப்படி வந்தது?, லஞ்சமாக பெறப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்சமாக பெறப்பட்ட பணம் என்று கண்டுபிடிக்கப்பட்டால் சார்பதிவாளர் மற்றும் ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

Tags:    

Similar News