செய்திகள்
சென்னை ஐகோர்ட்

பேனர் விழுந்து சுபஸ்ரீ பலி - அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜாமீன் மனு தள்ளிவைப்பு

Published On 2019-10-17 09:39 GMT   |   Update On 2019-10-17 09:39 GMT
விதிமீறல் பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணமடைந்த வழக்கில் ஜாமீன் கோரிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் மனுக்களை வருகிற 24-ந்தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை:

செப்டம்பர் 12ல் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான விதிமீறல் பேனர் வைத்த விவகாரத்தில் பள்ளிக்கரணை காவல் நிலையத்திலும், பரங்கிமலை போக்குவரத்து காவல்துறையும் வழக்கை பதிவு செய்தனர். தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு செப்டம்பர் 27ந்தேதி அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை செங்கல்பட்டு முதன்மை அமர்வு கோர்ட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு, கடந்த 15-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விதிமீறல் பேனர்கள் தொடர்பாக டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.ஷே‌ஷசாயி அமர்வில் அக்டோபர் 23-ந்தேதி விசாரணைக்கு வருவதால், ஜாமீன் மனுவை அதன்பின்னர் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

விதிமீறல் பேனர் வழக்கிற்கும், ஜாமீன் வழக்கிற்கும் தொடர்பில்லை என்பதால் தங்கள் மனுக்களை விசாரிக்க வேண்டுமென ஜெயகோபால், மேகநாதன் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாத்த்தையும் கேட்டறிந்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் வழக்கு விசாரணையை 24-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
Tags:    

Similar News