செய்திகள்
சென்னை ஐகோர்ட்

மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

Published On 2019-09-17 05:50 GMT   |   Update On 2019-09-17 05:50 GMT
முகலிவாக்கம் மாணவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னை:

சென்னையை அடுத்த முகலிவாக்கம் தனம்நகரை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் தீனா(14). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த தீனா, நேற்று முன்தினம் இரவு தனது நண்பனை பஸ்சில் ஏற்றி வழியனுப்பி விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தான்.

சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்திருந்த நிலையில், அந்த இடத்தை கடந்தபோது மாணவன் தீனா மின்சாரம் தாக்கி பலியானான். இந்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மின்கம்பியை சரியாக புதைக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக, மின்வாரிய உதவி பொறியாளர்கள் மீது மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்சன் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி இந்த விவகாரத்தை முன்வைத்தார். முகலிவாக்கம் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும்படி வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்சன் கோரிக்கை வைத்தார்.

ஆனால் அவரது கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். தாமாக முன்வந்து விசாரிக்க முடியாது என கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக மனுவாக தாக்கல்  செய்தால் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.
Tags:    

Similar News