செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

காவல், தீயணைப்பு துறையினர் 130 பேருக்கு அண்ணா பதக்கம்- முதல்வர் அறிவிப்பு

Published On 2019-09-14 06:37 GMT   |   Update On 2019-09-14 06:37 GMT
அண்ணா பிறந்தநாளையொட்டி காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையைச் சேர்ந்த 130 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை:

தமிழ் நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை மற்றும் தமிழ்நாடு விரல்ரேகைப் பிரிவு, தடயவியல் பிரிவு அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் இந்த ஆண்டு காவல்துறை, தீயணைப்புத்துறையைச் சேர்ந்த 130 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

காவல்துறையில் எஸ்பி முதல், முதல்நிலை காவலர் வரையிலான 100 பேருக்கும், தீயணைப்பு துறையில் 10 பேருக்கும் பதக்கம் வழங்கப்பட உள்ளது. சிறைத்துறையைச் சேர்ந்த 10 பேர், ஊர்க்காவல் படையில் 5 பேர், விரல்ரேகை பிரிவில் 2 பேர், தடய அறிவியல் துறையில் 2 பேர் அண்ணா பதக்கங்கள் பெற உள்ளனர்.  

மேலும், மணல் திருட்டைத் தடுத்தபோது உயிர்நீத்த முதல்நிலை காவலர் ஜெதீஷ் துரைக்கு வீரதீர செயலுக்கான காவலர் பதக்கம் வழங்கப்பட உள்ளது. அவரது குடும்பத்தினரிடம் இந்த பதக்கத்துடன், 5 லட்சம் ரூபாய் வெகுமதியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News