செய்திகள்
கலெக்டர் சிவஞானம்

விருதுநகர் மாவட்ட மகளிர் குழுவினர்களுக்கு ரூ.2.25 கோடி கடன் உதவி- கலெக்டர் சிவஞானம் வழங்கினார்

Published On 2019-07-23 11:01 GMT   |   Update On 2019-07-23 11:01 GMT
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (மகளிர் திட்டம்) மூலம் 94 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2.25 கோடி மதிப்பிலான வங்கி நேரடிக்கடனுதவிகளை கலெக்டர் வழங்கினார்.
விருதுநகர்:

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன.

முன்னதாக தாட்கோ மூலம் இளைஞர் சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 97 ஆயிரத்து 370 மானிய விலையில் டூரிஸ்ட் வாகனம், லோடு வாகனம், பயணியர் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (மகளிர் திட்டம்) மூலம் 94 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2.25 கோடி மதிப்பிலான வங்கி நேரடிக்கடனுதவிகளையும் கலெக்டர் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட வருவாய் அலகில், கிராம உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர்களாக பணிபுரிந்து காலமானவர்களின் வாரிசுதாரர்கள் 3 நபர்களுக்கும், நாட்டு பாதுகாப்பிற்காக போரில் ஈடுபடும்போது இறந்த - உடல் ஊனமுற்ற படை வீரர்களின் வாரிசுதாரர்கள் 7 நபர்களுக்கும் என மொத்தம் 10 நபர்களுக்கு கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர்களாக பணி நியமன ஆணைகளையும்,

அதனைத்தொடர்ந்து, அருப்புக்கோட்டை வட்டம், பந்தல்குடி கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ் வெங்கிடசாமி என்பவர் சவுதி அரேபியாவில் பணியாற்றிய போது இறந்தது தொடர்பாக, தனியாருக்கு சேர வேண்டிய சட்ட பூர்வ நிலுவை தொகைக்கான ரூ.4,73,367-க்கான காசோலையை அவரது மனைவி செல்வராணியிடம் கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ) முருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜெகதீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News