செய்திகள்
தற்கொலை முயற்சி

ராக்கிங் கொடுமை- கரூர் கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி

Published On 2019-07-19 14:16 GMT   |   Update On 2019-07-19 14:16 GMT
ராங்கிங் கொடுமையால் கல்லூரி மாணவர் விஷம் குடித்த சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர்:

கரூர் தாந்தோன்றி மலையில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. கரூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ்,செல்வகுமார் ஆகியோர் முதலா மாண்டில் சேர்ந்துள்ளனர்.

இந்தநிலையில் அந்த கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் சிவசக்தி, நந்தகுமார் ஆகியோர்  முதலமாண்டு  மாணவர்களான விக்னேஷ், செல்வகுமாரிடம் குடிக்க தண்ணீர் எடுத்து வரக்கூறி ராக்கிங்  செய்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த விக்னேஷ் எலி மருந்தை சாப்பிட்டு விட்டார். மயக்கமடைந்த அவர் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இது குறித்து செல்வகுமார் தாந்தோன்றிமலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். ராங்கிங் கொடுமையால் மாணவர் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News