செய்திகள்

ராமநாதபுரத்தில் பலத்த காற்று: வாகன ஓட்டிகள் திணறல்

Published On 2019-06-12 15:03 GMT   |   Update On 2019-06-12 15:03 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக பலத்த சூறாவளிக்காற்று வீசி வருவதால் கடலுக்கு செல்லும் மீனவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கீழக்கரை:

ராமநாதபுரம் பகுதியில் வீசி வரும் காற்றால் கண்களில் தூசி படிந்து இரு சக்கர வாகனங்களை ஓட்ட முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.

கடலோர பகுதிகளில் சூறாவளி காற்றால் ஏராளமான நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. காற்றின் காரணமாக பெரிய பட்டினம், முத்துப்பேட்டை, வேலாயுதபுரம்,கீழக்கரை, ஏர்வாடி பகுதிகளில் படகுகள் ஓரம் கட்டப்பட்டுள்ளது. மார்க்கெட்டிற்கு மீன்கள் வரத்தும் குறைந்துள்ளதால் வெறிச் சோடி காணப்படுகிறது.

திருவாடானை பகுதியில் ஆண்டிவயல் கிராமத்தில் வயல்காட்டில் மின்கம்பம் முறிந்து விழுந்ததால் ஆண்டிவயல், ஆதியூர், அரும்பூர், நம்புதாளை, முகிழ்த்தகம், சோலியக்குடி உட்பட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சப்ளை துண்டிக்கபட்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.

Tags:    

Similar News