செய்திகள்

ராஜபாளையம் அருகே பெண் போலீஸ் மீது தாக்குதல்

Published On 2019-06-03 11:44 GMT   |   Update On 2019-06-03 11:44 GMT
ராஜபாளையம் அருகே பெண் போலீஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக சேத்தூர் புறக்காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள கணபதிசுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் பாக்கியதாய். இவரது மகள் அழகுராணி (வயது 35). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

அழகுராணி தனது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். அந்த நாய் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை அடிக்கடி தொந்தரவு செய்து வந்தது. மேலும் சிலரை கடிக்க பாய்ந்தது.

இதுதொடர்பாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அழகுராணிக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் தன்னை தாக்கியதாக அழகுராணி சேத்தூர் புறக்காவல் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் உடனே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ராஜபாளையம் அருகே உள்ள அயன்கொல்லங் கொண்டானை சேர்ந்தவர் இந்திராதேவி (30). இவரது கணவர் ஜெயபால் (32). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

சில வருடங்களுக்கு முன்பு ஜெயபால் முருகேசுவரி(23) என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டு டீச்சர் காலனியில் குடித்தனம் நடித்தி வருகிறார். முதல் மனைவி வீட்டுக்கு அவர் செல்வதில்லை.

இந்த நிலையில் ஜெயபாலின் தாத்தா இறந்து விட்டார். துக்கம் விசாரிப்பதற்காக இந்திராதேவி டீச்சர் காலனியில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்றார்.

அப்போது ஜெயபால், 2-வது மனைவி முருகேசுவரி, பெற்றோர் பாண்டி யன்-செல்வராணி ஆகி யோர் தகராறு செய்து இந்திராதேவியை தாக்கினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து ஜெயபாலை கைது செய்தார்.
Tags:    

Similar News