செய்திகள்

காட்பாடி வங்கி அதிகாரி வீட்டில் வருமானவரி சோதனை

Published On 2019-04-11 08:45 GMT   |   Update On 2019-04-11 08:45 GMT
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வங்கி அதிகாரி வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். #ITRaids
வேலூர்:

காட்பாடியில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீடு, கல்லூரியில் வருமான வரி சோதனை நடந்தது. அவரது வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.


மேலும் தி.மு.க. பிரமுகர் வீடுகளில் கட்டு கட்டாக பணம் ரூ.11 கோடியே 48 லட்சம் சிக்கியது. இது தொடர்பாக தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், தி.மு.க. பிரமுகர்கள் சீனிவாசன், தாமோதரன், ஆகியோர் மீது காட்பாடி போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இந்த நிலையில் காட்பாடியில் உள்ள வங்கி அதிகாரி வீட்டில் இன்று வருமான வரி சோதனை நடந்தது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

காட்பாடி காந்திநகர் 7-வது குறுக்குதெருவை சேர்ந்தவர் தியாகராஜன். கனரா வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் இன்று மதியம் 12.50 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 7 பேர் அதிரடியாக புகுந்தனர். அங்கு சோதனை நடத்தினர்.

இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #ITRaids
Tags:    

Similar News