செய்திகள்

பாபநாசம் தாலுக்கா அலுவலகம் முன்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2019-02-23 16:15 GMT   |   Update On 2019-02-23 16:15 GMT
மத்திய- மாநில அரசுகள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பாபநாசம் தாலுக்கா அலுவலகம் முன்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாபநாசம்:

தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மத்திய- மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பாபநாசம் தாலுக்கா அலுவலகம் முன்பு மாநில தலைவர் கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் வங்கியில் வாங்கிய பயிர்க்கடன், நகைக்கடன், விவசாயக்கருவிகள் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

டெல்டா மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனே கைவிடவேண்டும். விவசாயிகள் வறட்சி மற்றும் புயல் வெள்ளத்தால் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு அரசு வேலை, நிவாரணம் வழங்கவேண்டும். விவசாயிகள் சார்ந்த குடும்பங்களுக்கு 50 சதவீதம இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் புத்தூர்.அயோத்தி, விவசாயிகள் சங்க துணைதலைவர் முருகன், சட்ட ஆலோசகர் பெல்.மகாலிங்கம், மாவட்ட செயலாளர் சிவகுருநாதன், மாவட்ட துணைத்தலைவர் சுவாமிநாதன், மாநில செயலாளர் காளிதாஸ், ஒன்றிய செயலாளர் சிவக்குமார், விவசாய சங்க தலைவர் பழனிசாமி, விவசாயிகள் சங்க செயலாளர் காசிராமன், விவசாயிகள் சங்க பொருளாளர் சுதாகர் , சங்க இயக்குனர் செல்வம் உள்பட திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர். #tamilnews
Tags:    

Similar News