செய்திகள்

நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது - ஐகோர்ட் அதிரடி

Published On 2019-01-29 15:31 GMT   |   Update On 2019-01-29 15:31 GMT
நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது என ஐகோர்ட் மதுரை கிளை இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. #HighCourt
மதுரை:

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது என அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையை அனுப்ப தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு ஆகியவற்றை கொடுக்கக் கூடாது. 

சொத்து வரி உள்ளிட்ட வரிகளும் வசூல் செய்யக் கூடாது. நீர்நிலை, அதிலுள்ள ஆக்கிரமிப்பு மூலவரைபட நகலை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் அனுப்ப வேண்டும். வரைபடத்தை பிப்ரவரி 8ம் தேதிக்குள் சார்பதிவாளர், மின்வாரியம், உள்ளாட்சி அமைப்பு மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும், நீர்நிலை ஆக்கிரமிப்பு பற்றிய உத்தரவில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக பிப்ரவரி 13-ல் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. #HighCourt
Tags:    

Similar News