செய்திகள்

தர்மபுரி மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 3,850 பேர் மனு

Published On 2019-01-29 06:15 GMT   |   Update On 2019-01-29 06:15 GMT
தர்மபுரி மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக நேற்று மாலை வரை 3,850 பேர் விண்ணப்பித்து உள்ளனர். #JactoGeo #Temporaryteachers
தர்மபுரி:

புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 22-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்தால், நடுநிலை, தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. முழு ஆண்டு தேர்வு நெருங்கும் வேளையில், மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, அரசு அறிவித்து உள்ளது.

முதலில் அவர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு சம்பளம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக டி.டி.எட். மற்றும் பி.எட்., தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

நேற்று மாலை வரை 3,850 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருக்கும் 900 பேரும் அடங்குவார்கள். மனு கொடுத்தவர்களிடம் இருந்து திறமையான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று முதல் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர். #JactoGeo #Temporaryteachers

Tags:    

Similar News