செய்திகள்

10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாட்டில் சந்தேகத்தை சிலர் கிளப்புகிறார்கள் - மோடி பேச்சு

Published On 2019-01-27 08:13 GMT   |   Update On 2019-01-27 08:13 GMT
வருமானத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்டம் பற்றி தமிழ்நாட்டில் சிலர் சந்தேகத்தை கிளப்பி வருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மதுரை:

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, அதன்பின் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது ‘‘நாட்டை கொள்ளையடித்தவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டோம். எங்கிருந்தாலும் அவர்களை கொண்டுவந்து நீதியின் முன்னர் நிறுத்தியே தீருவோம். நாட்டின் காவல்காரரான தன்னை நீக்குவதற்காக எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து மாபெரும் கூட்டணியை அமைத்துள்ளன.

வருமானத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்டம் பற்றி தமிழ்நாட்டில் சிலர் தங்களது ஆதாயத்துக்காக சந்தேகத்தை கிளப்பி வருவது துரதிர்ஷ்டவசமானது. இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டால் தற்போது நடைமுறையில் இருக்கும் தலித்துகள், பழங்குடியினர் உள்ளிட்டோருக்கான இட ஒதுக்கீட்டு முறையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது’’ என்றார். #ModiinMadurai  #10pcEWSquota
Tags:    

Similar News