செய்திகள்
கோப்புப்படம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 144 கன அடியாக சரிவு

Published On 2019-01-03 11:34 GMT   |   Update On 2019-01-03 11:34 GMT
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று 179 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 144 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. #MetturDam
மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

நேற்று 179 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 144 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்திற்காக 8 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

நேற்று 84.87 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 84.2 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது. #MetturDam
Tags:    

Similar News