செய்திகள்

கருணாநிதி சிலை திறப்பு விழா: கமல் பங்கேற்கவில்லை

Published On 2018-12-16 05:33 GMT   |   Update On 2018-12-16 05:53 GMT
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் பங்கேற்கமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. #KarunanidhiStatue
சென்னை:

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமலும் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதனை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உறுதி செய்துள்ளனர்.

கொடைக்கானலில் கஜா புயல் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. ஏற்கனவே திட்டமிட்ட இந்த நிகழ்ச்சியில் கமல் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று மாலை அங்கு புறப்பட்டு செல்கிறார். இதற்கிடையே திமுக - காங்கிரஸ் கூட்டணியில் கமல் சேரப்போவதாக நேற்று மாலை தகவல்கள் பரவியது.

காங்கிரஸ் கட்சியோடு இது தொடர்பாக பேச்சு நடத்தப்பட்டதாகவும், கமல் 5 தொகுதிகளை கேட்டு இறுதியில் 2 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் கமல் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் டுவிட்டர் மூலமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், நான் அரசியலுக்கு வந்த காரணத்தை நாம் உணர்வோம். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல. வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News