செய்திகள்

திண்டுக்கல்லில் மின் வாரிய ஊழியர்கள் திடீர் கைது

Published On 2018-11-13 11:20 GMT   |   Update On 2018-11-13 11:20 GMT
திண்டுக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்:

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.380 தினக்கூலி ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தி ஒப்பந்த ஊழியரை நிரந்தரப்படுத்த வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.

மேலும் பாதுகாப்பு சாதனங்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் திருமலைபாலாஜி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கைளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட முயன்ற 253 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News