செய்திகள்

போனஸ் வழங்காவிட்டால் தீபாவளியன்று வீடுகளில் கருப்புக்கொடி- உப்பு நிறுவன தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

Published On 2018-11-03 15:12 GMT   |   Update On 2018-11-03 15:12 GMT
போனஸ் வழங்காவிட்டால் தீபாவளியன்று வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கதவடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று உப்பு நிறுவன தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளன. #Diwali
சாயல்குடி:

வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவன தொழிலாளர்களுக்கு சம்பளம் மற்றும் போனஸ் வழங்காத மேலாண்மை இயக்குநரை கண்டித்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

பரமக்குடி சப்-கலெக்டர் விஸ்ணுசந்திரன் உத்தரவின் பேரில் கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன், கடலாடி வட்டாட்சியர் முத்துலட்சுமி, துணை வட்டாட்சியர் செந்தில் வேல்முருகன் ஆகியோர் விரைந்து சென்று உப்பு நிறுவன திட்ட மேலாளர் விஜயன் மற்றும் தொழிற் சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

செப்டம்பர் மாத ஊதியம் தொழிலாளர்களின் வங்கி வணக்கில் வரவு வைக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.

போனஸ் தொகை தீபாவளிக்கு முந்தைய நாளுக்குள் வழங்கப்படாத பட்சத்தில் தீபாவளி அன்று தொழிலாளர்களின் வீடுகளில் கருப்புகொடி ஏற்றுவதுடன் தொடர்ந்து கதவு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். #Diwali
Tags:    

Similar News