செய்திகள்

கோத்தகிரி-குன்னூர் சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Published On 2018-11-01 16:36 GMT   |   Update On 2018-11-01 16:36 GMT
கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது.
கோத்தகிரி:

கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் வெஸ்ட்புரூக் பகுதியில் நேற்று காலை 10 மணியளவில் பலத்த காற்று வீசியது. இதற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாலையோரத்தில் இருந்த 2 சீகை மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தன.

இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி தீயணைப்பு நிலைய அலுவலர்(பொறுப்பு) மோகன் தலைமையிலான வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் மின்வாள் மூலம் சாலையில் விழுந்த மரங்களை துண்டு, துண்டாக வெட்டி அகற்றினர். இதனை தொடர்ந்து அரை மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் அந்த வழியே போக்குவரத்து சீரானது.
Tags:    

Similar News