செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

Published On 2018-09-29 09:58 GMT   |   Update On 2018-09-29 09:58 GMT
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.
மேட்டூர்:

மேட்டூர் அணையில் நேற்று 23 ஆயிரத்து 64 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 20 ஆயிரத்து 357 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக 24 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

நேற்று 104.36 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 104.07 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது.

ஒகேனக்கலில் நேற்று 19 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 13 ஆயிரம் கன அடியாக குறைந்தது. சனிக்கிழமையான இன்று அதிகாலை முதலே அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

அருவியில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோரம் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்ததுடன் உற்சாகமாக பரிசல் சவாரியும் சென்றனர்.


Tags:    

Similar News