செய்திகள்

மதுரையில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் தகராறு - 19 பேர் கைது

Published On 2018-09-25 11:16 GMT   |   Update On 2018-09-25 11:16 GMT
மதுரையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு செய்த 19 பேரை போலீசார் கைது செய்தனர். #arrest

மதுரை:

விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு செய்த 19 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 13-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மதுரை நகரில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் விளக்குத் தூண், மாசி வீதிகள் வழியாக கொண்டு செல்லப் பட்டு வைகை யாற்றில் கரைக்கப்பட்டன.

ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க 500-க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

எனினும் ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் போலீசாரின் விதிமுறை களை மீறி பொதுமக்க ளுக்கும், பொது சொத்துக் களுக்கும் பங்கம் விளை விக்கும் வகையில் நடந்து கொண்டனர்.

அதன் அடிப்படையில் இந்து முன்னணி கட்சியைச் சேர்ந்த அழகர்சாமி, மாணிக்கமூர்த்தி, சுப்பையா ஆகிய 3 பேரை தெற்குவாசல் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் சோலையழகு புரத்ைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ரவிச்சந்திரன், கணேசன் மற்றும் பாக்கியராஜ், முருகன், சுந்தரபாண்டி, சிங்கம்பெருமாள், மணிகண்டன், சரவணன், காளீஸ்வரன், ரவிச்சந்திரன், திருமுருகன், அருண்பாண்டி, செல்வகுமார், பாண்டி, ராஜமுத்து, கார்த்திக் ஆகியோரை ஜெய்ஹிந்து புரம் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News