செய்திகள்

பெரியாறு-வைகை அணையில் நீர்திறப்பு மேலும் குறைப்பு

Published On 2018-09-19 11:19 GMT   |   Update On 2018-09-19 11:19 GMT
மழை ஓய்ந்துவிட்டதால் பெரியாறு, வைகை அணையில் நீர்திறப்பு மேலும் குறைக்கப்பட்டது.
கூடலூர்:

நீர்பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் ஓய்ந்துவிட்ட நிலையில் முல்லைபெரியாறு அணைக்கு 226 கனஅடி நீரே வருகிறது. அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து 127.5 அடியாக உள்ளது. எனவே நீர்திறப்பை குறைக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

தற்போது அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 1689கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்தடைகிறது.

4 ஆண்டுகளுக்கு பிறகு வைகை அணை நிரம்பியதால் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அணைக்கு 1394 கனஅடி நீரே வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 59.65 அடியாக உள்ளது. நீர்திறப்பு 2360கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.55 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 115.45 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
Tags:    

Similar News