செய்திகள்

எச்.ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2018-09-19 09:45 GMT   |   Update On 2018-09-19 09:45 GMT
காவல்துறை மற்றும் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசிய எச்.ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். #HRaja #Jayakumar
ராயபுரம்:

ராயபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தனியார் கணினி பயிற்சி மையத்தை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

வரி வருவாயின் பெரும் பகுதி மத்திய அரசுக்கு சென்று விடுகிறது. எனவே அடிப்படை வசதிகள் செய்வதை தவிர தமிழக அரசின் முக்கிய செலவுகளுக்கு நிதி தட்டுப்பாடு ஏற்படுகிறது.

எனவே மத்திய அரசு 6 ஆயிரம் கோடி ரூபாயை உடனே தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும். இதற்கு இங்குள்ள பா.ஜனதா தலைவர்களும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

எச்.ராஜா மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோர்ட்டையும் அணுகி இருக்கிறார்கள். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய அரசிடம் இருந்து எந்த அழுத்தமும் இல்லை. தமிழக அரசு அம்மா வழியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தர்ப்பவாதி. பாஜனதாவுடன் தி.மு.க. கூட்டணி அமைத்தபோது பல்வேறு சலுகைகளை அனுபவித்தனர். இப்போது குறை கூறுகிறார்கள். நாங்கள் நிறம் மாறாத பூக்கள். என்ன முயற்சி செய்தாலும் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வராது.

டி.டி.வி.தினகரன் எங்கள் மீது குறை கூறுகிறார். வழிப்போக்கன் எங்கேயோ பார்த்து பேசுவதுபோல பேசிக்கொண்டிருக்கிறார். அவரால் எங்களுக்கு எந்தவித நிர்ப்பந்தமும் இல்லை. அவர் சொல்வது பற்றி கவலைப்படவும் அவசியம் இல்லை.

இவ்வாறு ஜெயக்குமார் கூறினார். #HRaja #HRajaInsultsMadrasHighCourt #Jayakumar
Tags:    

Similar News