செய்திகள்

படிக்கும் காலத்தில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்- மாணவர்களுக்கு அறிவியல் ஆலோசகர் அறிவுரை

Published On 2018-09-15 11:27 GMT   |   Update On 2018-09-15 11:27 GMT
படிக்கும் காலத்தில் மாணவர்கள் இலட்சியம், நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவியல் ஆலோசகர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரத்தில் சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் 2-ம் ஆண்டு நிறைவு விழா அகாடமி நிறுவனர் சுகேஷ் சாமுவேல் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நூலகர் (பொறுப்பு) நித்தியானந்தம், தூத்துக்குடி கருவூல உதவி அலுவலர் கனி முருகன், தங்கம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன், அகாடமி இயக்குநர் வித்யா சுகேஷ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

ராமநாதபுரம் கிளை ஒருங்கிணைப்பாளர் சங்கர் பிரபு வரவேற்றார்.

சுரேஷ் அகாடமியில் பயிற்சி பெற்று போட்டி தேர்வுகளில் வென்று பல்வேறு துறைகளில் அரசு பணியில் உள்ள சாதனையாளர்களுக்கு ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஹெட்லி லீமா அமாலினி பரிசு வழங்கினார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முன்னாள் ஆலோசகர் பொன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

போட்டி தேர்வு பயிற்சியாளர்களிடம் பொன்ராஜ் பேசியதாவது:-

அகாடமி நிறுவனர் சுகேஷ், கடந்த 2006-ம் ஆண்டிலிருந்து போட்டி தேர்வுகள் மூலம் தற்போது வரை அரசு துறைகளில் 14 ஆயிரம் ஊழியர்களை உருவாக்கி மிகப் பெரிய சரித்திரம் படைத்துள்ளார்.

கலாம் பிறந்த மண்ணில் பயின்ற நீங்கள் வேலைக்காக தேர்ந்தெடுக்கும் எந்த துறையாக இருந்தாலும் சிறந்து விளங்க வேண்டும். சாதனையாளராக வருவேன் என படிக்கும் காலத்தில் மாணவர்கள் இலட்சியம், நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் 14 லட்சம் அரசு ஊழியர்கள் ஏழரை கோடி மக்களை நிர்வகிக்கின்றனர்.

நாட்டில் அனைத்து மட்டத்திலும் நிலவும் லஞ்சம், ஊழலை அடியோடு வேரறுக்க மாணவர்கள் சிறந்த அரசியல் தலைவர்களாக உருவாக வேண்டும். மாணவர்களின் உழைப்பு எதிர்கால சந்ததியினருக்காக இருக்க வேண்டும்.

2050-ல் உலக மக்கள் தொகை 9 பில்லியனாக இருக்கும் போது உலகத்திற்கே உணவு தேவையை பூர்த்தி செய்வதில் சீனா, இந்தியா பெரும் பங்கு வகிக்கப்போகிறது. 2000 கிலோ மீட்டர் தூர நதிகளை இணைத்து விவசாயத்திற்கு சீனா சவால் விடுகிறது.

இந்தியாவில் தண்ணீரை கடலுக்குள் விட்டு வேடிக்கை பார்க்கிறோம். நீரை சேமிக்க வழி தெரியாமல் தமிழகமும் தண்ணீரை கடலுக்கு அனுப்புகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தூத்துக்குடி தொழிலதிபர் ஸ்டீபன்ராஜ், காவல் துணை கண்காணிப்பாளர் லில்லி கிரேஸி, தூத்துக்குடி கூட்டுறவு சார் பதிவாளர் அந்தோணி பட்டுராஜ், சுரேஷ் அகாடமி நெல்லை கிளை ஒருங்கிணைப்பாளர் அருண் சங்கர், கோவில்பட்டி பரோடா வங்கி ஊழியர் ராஜா, ஆர்.எஸ்.மங்கலம் வருவாய் ஆய்வாளர் கோபிநாத், ராமநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர் தட்சிணாமூர்த்தி, பட்டுக்கோட்டை துணை வட்டாட்சியர் பாலகோபாலன் உள்பட பலர் பங்கேற்றனர். ராமநாதபுரம் கிளை ஒருங்ணைப்பாளர் சுரேஷ் குமார் நன்றி கூறினார். #tamilnews
Tags:    

Similar News