செய்திகள்

புதுவையில் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் சீன பட்டாசுகள் விற்பனை

Published On 2018-09-06 10:23 GMT   |   Update On 2018-09-06 10:23 GMT
புதுவை மாநிலத்தில் சாதரண கடைகளில் ஆபத்தை உண்டாக்கும் சீன பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திருபுவனை:

இந்தியாவில் சீன பட்டாசுகளை விற்க பல மாநிலங்களில் தடை உள்ளது. அவற்றில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாலும், உடல்நலத்தை பாதிக்கும் ரசாயனங்கள் கலந்து இருப்பதாலும் தடை விதித்துள்ளனர்.

ஆனாலும், அதையும் மீறி பல மாநிலங்களிலும் சீன பட்டாசுகள் விற்கப்படுகின்றன. புதுவையிலும் இதேபோன்ற சீன பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக திருபுவனை பகுதிகளில் சாதாரண கடைகளிலும் சீன பட்டாசுகளை வாங்கி வைத்து விற்று வருகிறார்கள். இவற்றை குழந்தைகள் ஆர்வத்துடன் வாங்கி சென்று வெடிக்கிறார்கள்.

லோசாக தீ வைத்ததுமே அவை வெடித்து விடுகின்றன. மேலும் கீழே வீசினாலும் வெடிக்கும் வகையிலான பட்டாசுகளும் உள்ளன. இவற்றால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News