செய்திகள்

தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.82 கோடி - வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது

Published On 2018-09-01 10:43 GMT   |   Update On 2018-09-01 10:43 GMT
தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.82 கோடி என தேர்தல் கமிஷன் வெளியிட்ட வாக்காளர் வரைவுப் பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது. #TNelectoral #draftroll #5.82crorevoters
சென்னை:

வரைவு வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்க திருத்தப் பட்டியல்-2019 அறிக்கையாக நேற்று வெளியிடப்பட்டது.

அதன்படி 2018-ம் ஆண்டில் சிறப்பு சுருக்க திருத்தத்தின்படி, முன்னர் இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.86 கோடியில் 4 லட்சம் பேர் குறைந்துள்ளனர். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2.94 கோடியாகவும், ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2.88 கோடியாகவும் உள்ளது. மூன்றாம் பாலினத்தவர் 5,184 பேர் உள்ளனர்.

புதிதாக 1.82 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இறப்பு, இடமாற்றம், திருத்தம் ஆகியவற்றின் மூலம் 5.78 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையும் 65,952ல் இருந்து 67,644 ஆக உயர்ந்துள்ளது. வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு முகாம்கள் வரும் செப்டம்பர் 9, 23, அக்டோபர் 7, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இங்கு வைக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து பொதுமக்கள் தங்களின் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்து கொள்ளலாம். #TNelectoral #draftroll #5.82crorevoters 
Tags:    

Similar News