செய்திகள்
கோப்புப்படம்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

Published On 2018-08-23 11:23 GMT   |   Update On 2018-08-23 11:23 GMT
கபினி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூரை வந்து அடைகிறது. ஒகேனக்கலுக்கு நேற்று 70 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து மேலும் குறைந்தது.
ஒகேனக்கல்:

தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து இன்று 4 ஆயிரத்து 570 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கபினி அணையில்இருந்து இன்று 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

கபினி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூரை வந்து அடைகிறது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு 1 லட்சம் கனஅடி வீதமும் நேற்று 70 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து மேலும் குறைந்தது. தற்போது 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது.

நீர்வரத்து குறைந்தாலும் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் மெயின் அருவியில் தடுப்பு கம்பிகள் சேதமடைந்து உள்ளது. அங்கு குப்பை கூளங்களும் அதிக அளவில் தேங்கி உள்ளன. இவற்றை சீரமைத்து தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்ட பிறகுதான் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

Tags:    

Similar News