செய்திகள்

சுதந்திர தினத்தில் மதுபாட்டில் பதுக்கி விற்ற கும்பல் கைது

Published On 2018-08-16 10:30 GMT   |   Update On 2018-08-16 10:30 GMT
தேனி மாவட்டத்தில் சுதந்திர தினத்தில் மது பாட்டில் பதுக்கி விற்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தேனி:

தேனி மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று மதுபானங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதனையும் மீறி பல இடங்களில் மது பாட்டில் விற்றது தெரிய வரவே போலீசார் அவர்களை கைது செய்தனர்.

போடி அருகே உள்ள குலாளர்பாளையம் வாமனன் தெருவில் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் பிரபு தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செல்வம் (வயது 55) என்பவர் 192 மது பாட்டில் மற்றும் ½ கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தார். போலீசார் அவரை கைது செய்து மது மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதே போல் கடமலைக்குண்டு அருகே உள்ள மூலக்கரை பகுதியில் பரமசிவம் என்பவரும், உப்போடை பாலம் அருகே ஜெகன் என்பவரும் தேனி பழைய பஸ்நிலையம் எதிரே பூதிபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரும் அனுமதியின்றி மது பானங்கள் பதுக்கி விற்பனை செய்தனர். போலீசார் அவர்களை கைது செய்ததுடன் மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News