செய்திகள்

திண்டுக்கல் அருகே கணவர் 2-வது திருமணம் செய்ததால் மனைவி தற்கொலை

Published On 2018-08-10 10:28 GMT   |   Update On 2018-08-10 10:28 GMT
திண்டுக்கல் அருகே கணவர் 2-வது திருமணம் செய்ததால் மனைவி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாடிக்கொம்பு சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாடிக்கொம்பு:

திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டி சுந்தர்நகரை சேர்ந்தவர் அபிராமி (வயது26). இவருக்கும் அவரது உறவினரான மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 2017-ம் ஆண்டு 2 பேரும் கோர்ட்டுக்கு சென்று விவாகரத்து பெற்றனர்.

தற்போது மணிகண்டன் 2-வது திருமணம் செய்து கொண்டார். இதனால் மனஉளைச்சலில் இருந்த அபிராமி வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாடிக்கொம்பு சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News