செய்திகள்

ஆடி அமாவாசையையொட்டி ராமேசுவரத்திற்கு சிறப்பு ரெயில்கள்

Published On 2018-08-09 08:07 GMT   |   Update On 2018-08-09 08:07 GMT
நாளை மறுநாள் ஆடி அமாவாசை வருவதையொட்டி ராமேசுவரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். அவர்களின் வசதிக்காக மதுரையில் இருந்து ராமேசுவரத்திற்கு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை:

தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் அக்னி தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது புண்ணியமாக கருப்படுகிறது.

குறிப்பாக அமாவாசை நாட்களில் திதி கொடுப்பதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் அமாவாசை அன்று பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

நாளை மறுநாள் (11-ந் தேதி) ஆடி அமாவாசை வருவதையொட்டி ராமேசுவரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். அவர்களின் வசதிக்காக மதுரையில் இருந்து ராமேசுவரத்திற்கு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மதுரையில் இருந்து ராமேசுவரத்திற்கு நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 10.40 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம், பாம்பன் ஆகிய ரெயில் நிலையங்களில நின்று செல்லும். இந்த ரெயில் அதிகாலை 2 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும்.

ராமேசுவரத்தில் இருந்து 11-ந்தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் ரெயில் அதிகாலை 2.15 மணிக்கு மதுரை வந்தடையும்.

மேற்கண்ட தகவலை மதுரை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News