செய்திகள்

வத்தலக்குண்டுவில் பிடிபட்ட கொள்ளை கும்பல் - போலீசார் விசாரணை

Published On 2018-08-05 11:08 GMT   |   Update On 2018-08-05 11:08 GMT
வத்தலக்குண்டுவில் பிடிபட்ட கொள்ளை கும்பலிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளையர்கள் தொடர்ந்து தங்கள் கைவரிசையை காட்டி வந்தனர். வீடுபுகுந்து நகை-பணம் கொள்ளையடிப்பது, தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பது உள்ளிட்ட அட்டகாசங்களை செய்து வந்தனர்.

இதனால் பொதுமக்கள் வெளியே நடமாட அச்சமடைந்தனர். ஒருசிலர் தனியார் காவலாளிகளை நியமித்து தங்களை பாதுகாத்தனர். இருந்தபோதும் கொள்ளையர்கள் அட்டகாசம் தொடர்ந்த வண்ணம் இருந்தது.

வத்தலக்குண்டு அருகே மலையப்பன்பட்டியில் கோவில் திருவிழாவையொட்டி மைக்செட் மற்றும் ஆம்பிளிபயர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனை மர்மகும்பல் திருடிச்சென்றது. இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. முருகன் தலைமையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 6 பேர் கொண்ட கும்பலை விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து மேலும் தீவிரமாக விசாரிக்கின்றனர். முதற்கட்டமாக கொள்ளை கும்பலில் 14 பேர் உள்ளது தெரியவந்தது.

இவர்கள் வேறு ஏதும் இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டனரா? என்பது குறித்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர். அவர்களிடமிருந்து பைக் மற்றும் மோட்டார் வயர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீஸ் நிலையம் அருகே மைக்செட் உரிமையாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News