செய்திகள்

பாகூரில் கம்யூனிஸ்டு பிரமுகருக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது

Published On 2018-08-04 09:55 GMT   |   Update On 2018-08-04 09:55 GMT
பாகூரில் கம்யூனிஸ்டு பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பாகூர்:

பாகூர் மாரி நகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 62). ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர் தற்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பாகூர் தொகுதி செயலாளராக உள்ளார்.

இந்த நிலையில் நேற்று கட்சி பணிக்காக கலியமூர்த்தி மோட்டார் சைக்கிளில் பரிக்கல்பட்டு ரோடு வழியாக சென்றார்.

அப்போதுஅங்கு பாகூர் பழைய காமராஜர் தெருவை சேர்ந்த ராமு (30) உள்ளிட்ட சிலர் சாலையில் வழிமறித்து நின்றனர். இதனை கலியமூர்த்தி தட்டிக் கேட்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த ராமு தகாத வார்த்தைகளாலும், சாதி பெயரை சொல்லியும் கலிய மூர்த்தியை திட்டினார். மேலும் கொலை செய்து விடுவதாகவும் ராமு மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து கலியமூர்த்தி பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு வழக்குபதிவு செய்து ராமுவை கைது செய்தார்.

Tags:    

Similar News