செய்திகள்

பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: கொடைக்கானலில் கல்லூரி மாணவிகள் திடீர் மறியல்

Published On 2018-07-25 10:11 GMT   |   Update On 2018-07-25 10:11 GMT
கொடைக்கானலில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவிகள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி:

கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் அன்னை தெரசா பல்கலைக்கழத்திற் குட்பட்ட கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பயிலும் மாணவிகளுக்கு சீனிவாசபுரத்தில் விடுதி உள்ளது. விடுதியில் இருந்து கல்லூரிக்கு மாணவிகளை அழைத்து வர கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பஸ் இயக்கப்படுகிறது. இதற்கு கட்டணமாக 6 மாதத்திற்கு ரூ.1500 வசூலிக்கப்பட்டது.

தற்போது ஒரு மாதத்திற்கு கட்டணமாக ரூ.1000 நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி வந்தனர். ஆனால் நிர்வாகத்தின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகள் ஏராளமானோர் வத்தலக்குண்டு- கொடைக்கானல் சாலையில் சீனிவாசபுரம் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மலைச்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சம்பவம் குறித்து அறிந்ததும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவிகளிடம் சமரசபேச்சு வார்த்தை நடத்தினர்.

இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்று கோரிக்கை நிறைவேறும் வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News