செய்திகள்

சங்கராபுரம் அருகே இன்று ஆக்கிரமிப்பு கடைகள் பொக்லைன் மூலம் இடிப்பு

Published On 2018-07-18 14:40 GMT   |   Update On 2018-07-18 14:40 GMT
சங்கராபுரம் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் இடிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ரிஷிவந்தியம்:

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வானமாபுரம் பகண்டை கூட்டுரோட்டில் சாலையின் இருபுறமும் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஆக்கிமித்து கடைகள் அமைத்துள்ளனர்.

அவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடத்தில் பலசரக்கடைகள், பழக்கடைகள், செல்போன் கடைகள், காய்கறி கடைகள் அமைத்துள்ளனர்.இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

இதைத்தொடர்ந்து சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்றக்கோரி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதில் ஆக்கிரமிப்பு கடைகளை உடனே அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தனர். மேலும் கடைகளை இன்றுவரை அகற்றவேண்டும் என்று காலக்கொடு கொடுக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி பலர் கடைகளில் இருந்த பொருட்களை தானாகவே முன்வந்து எடுத்து சென்றுவிட்டனர். இன்று காலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் எந்திரங்களுடன் பகண்டை கூட்டுரோட்டுக்கு வந்தனர்.

விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம் (பொறுப்பு, திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் ரத்தின சபாபதி, சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் முருகேசன், பகண்டை கூட்டுரோடு சப்-இன்ஸ்பெக்டர் குணபாலன் மற்றும் சங்கராபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரி பிரபாகரன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் வந்தனர்.

பின்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தகர்க்கப்பட்டன. சாலையின் இருபுறமும் இருந்த 100-க்கும் மேற்பட்ட கடைகள் இடிக்கப்பட்டன.

ஆக்கிரமிப்பு கடைகள் இடிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #tamilnews
Tags:    

Similar News