செய்திகள்
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதை படத்தில் காணலாம்

மேட்டூர் அணையில் இருந்து 19-ம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

Published On 2018-07-16 08:28 GMT   |   Update On 2018-07-16 08:28 GMT
மேட்டூர் அணையில் இருந்து 19-ம் தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #MetturDam #EdappadiKPalaniswami
சென்னை:

தமிழக அமைச்சரவையின் ஆலோசனை கூட்டம் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் இன்று நடைபெற்றது. அமைச்சர்கள், உயரதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் வரும் 19-ம் தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.



இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.19 அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 993.72 கன அடியாகவும், நீர் இருப்பு 51.72 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் காவிரி படுகையில் உள்ள சுமார் 700 ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்பும். அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. #MetturDam #EdappadiKPalaniswami
Tags:    

Similar News