செய்திகள்

இளம் டாக்டர்கள் முதலில் கிராமங்களில் பணியாற்ற வேண்டும் - வெங்கையா நாயுடு

Published On 2018-07-08 12:02 GMT   |   Update On 2018-07-08 12:02 GMT
மருத்துவ படிப்பை முடித்த இளம் டாக்டர்கள் முதலில் கிராமங்களுக்கு சென்று பணியாற்ற வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தியுள்ளார்.
சென்னை :

சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற 30-வது பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதில், அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

விழாவில் உரையாற்றிய வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளதாவது, ’மருத்துவ கல்லூரிகளின் கல்வி தரத்தை பொருத்து தான் வருங்கால ஆரோக்கியமான இந்தியா அமையும். மேலும், டாகடர்களின் தரத்தை பொருத்தே மருத்துவமனைகளின் தரமும் அமையும்.

மேலும், முதல் பதவி உயர்வு கிடைக்கும் வரை மருத்துவ படிப்பை முடித்த இளம் டாக்டர்கள் முதலில் கிராமங்களுக்கு சென்று பணியாற்ற வேண்டும். நாடுமுழுதும் 479 மருத்துவ கல்லூரிகள் உள்ளன அவற்றில் 227 அரசும் 252-யை தனியாரும் நிர்வகித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கையை உயர்த்த அரசு முயற்சி செய்து வருகிறது. இந்தியாவிலேயே சுகாதாரத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் மாறிவருகிறது’.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 
Tags:    

Similar News