செய்திகள்

ரேஷன் பொருட்களை வழங்காததை கண்டித்து ஜெயங்கொண்டத்தில் சாலை மறியல்

Published On 2018-07-05 14:32 GMT   |   Update On 2018-07-05 14:32 GMT
அரிசி மற்றும் ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் திருச்சி -சிதம்பரம் சாலையில் உள்ள ரேஷன் கடையில் பல்வேறு வார்டுகளில் உள்ள  பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்கி வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த  மூன்று மாத காலமாக அரிசி மற்றும் ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ரேஷன் கடை முன்பாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.   

சம்பவ மறிந்து வந்த தாசில்தார் குமரையா, வட்ட வழங்கல் அலுவலர் சம்பத், வருவாய் ஆய்வாளர் சிவசக்தி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு அரிசி வழங்குவதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை  கைவிட்டுகலைந்து சென்றனர். மேலும் உடனடியாக அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Tags:    

Similar News