search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ration goods"

    • பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இந்த ஆர்பாட்டத்தில் மதுரை நகரில் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க வேண்டும்.

    மதுரை

    மதுரையில் மாநில அரசை கண்டித்து மாநகர் மாவட்ட பா.ஜ.க. மகளி ரணி, இளைஞரணி மற்றும் கூட்டுறவு பிரிவு சார்பில ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலா ளர்கள் ராஜ்குமார், பால கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்பாட்டத்தில் மதுரை நகரில் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் நடைபெறுகிற ஊழலை தடுத்த நிறுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி தலைவர் ஜூவா நகர் மீனா, இளைஞணி தலைவர் பாரிராஜா, கூட்டுறவு பிரிவு தலைவர் செந்தில்வேல் கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் பாஸ்கரன், மேற்கு மாவட்ட பார்வையாளர் ராஜரத்தி னம், மாவட்ட துணைத் தலைவர் வினோத்குமார், ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திரபாண்டியன், மணிமாலா உள்பட ஏராள மான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அபிராமம் பகுதியில் ரேசன் பொருட்கள் சரிவர கிடைக்காததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
    • கோதுமை, மண்எண்ணெய் சீனி, துவரம்பருப்பு உள்பட அனைத்து பொருட்களும் கிடைப்பதில்லை.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், அபிராமம் பகுதியில் உள்ள ரேசன்கடைகளில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அரிசி, தவிர கோதுமை, சீனி, துவரம்பருப்பு, மண்எண்ணெய் உள்பட அனைத்து பொருட்களும் சரிவர கிடைக்காததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ரேசன்கடையில் அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் சாதாரண மக்கள் முதல் நடுத்தர மக்களும் ரேசன்கடையில் உணவு பொருட்களை வாங்கி பயனடைகின்றனர். அபிராமம் பகுதியில் உள்ள 3 ரேசன் கடைகளில் 1200 ரேசன்கார்டுதாரர்கள் பயனடைந்து வருகின்றனர்.

    கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக அக்னி வெயில் நட்சத்திரம் முடிந்த நிலையிலும் தொடர் வெப்பத்தால் பகல்நேரங்களில் ரேசன்கடைகளுக்கு பொதுமக்கள் வருகை குறைவாக காணப்படுகிறது. வெயிலின் தாக்கம் குறைந்து காலை, மாலை ரேசன்கடைகளுக்கு சென்றால் கடை பூட்டியே கிடைக்கிறது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது.

    ரேசன்கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் அரிசியை தவிர கோதுமை, சீனி, துவரம்பருப்பு, மண்எண்ணெய் உள்பட பல பொருட்கள் அபிராமம் பகுதி பொதுமக்களுக்கு பெயரளவிற்கு மட்டுமே கிடைக்கிறது. முன் கூட்டியே ரேசன் பொருட்கள் வாங்க வராமல் மாத கடைசியில் ரேசன்கடைக்கு ரேசன் பொருட்கள் வாங்க வருவோர் ஏமாற்றம் அடைகின்றனர்.

    இதுபற்றி அபிராமம் அப்பகுதி மக்கள் கூறுகையில், தகுதியான அனைத்து ரேசன்கார்டு தாரர்களுக்கும் கோதுமை, மண்எண்ணெய் சீனி, துவரம்பருப்பு உள்பட அனைத்து பொருட்களும் கிடைப்பதில்லை. ஏழை மக்களின் நன்மை கருதி அனைத்து பொருட்களும் அனைத்து மக்களுக்கும் மாதந்தோறும் ரேஷனில் ரேசன் பொருட்கள் கிடைக்க சமந்தப்பட்ட உணவுப்பொருள் வழங்கள் மற்றும் கூட்டுறவு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மதுரையில் ரேசன் பொருட்கள் ஏற்றி வந்த லாரிகள் சகதியில் சிக்கி தவித்தன.
    • ரேசன் கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் 1200-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணை, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்கள் சுந்தரராஜபுரம் பகுதியில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

    பின்பு அங்கிருந்து மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. அதேபோல் ரேசன் பொருட்கள் இந்த குடோனுக்கு கொண்டு வரப்படுகின்றன.

    மதுரையில் தொடர்ந்து 10நாட்களுக்கு மேலாக மழை பெய்ததன் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகள் ேசதமடைந்து கிடக்கிறது. சுந்தரராஜபுரம் குடோன் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக மாறி சகதிக்காடாக இருக்கிறது.

    இதனால் குடோனில் இருந்து ரேசன் பொருட்களை எடுத்துச் சென்ற லாரிகள் சகதியில் சிக்கின. அதிலிருந்து லாரிகளை வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த குடோனில் இருந்து தினமும் 20லாரிகளில் 300-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்லப்படுகிறது.

    சகதியில் லாரிகள் சிக்கி தவித்ததால் ரேசன் கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து சகதியில் சிக்கிய லாரிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அரிசி மற்றும் ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் திருச்சி -சிதம்பரம் சாலையில் உள்ள ரேஷன் கடையில் பல்வேறு வார்டுகளில் உள்ள  பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்கி வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த  மூன்று மாத காலமாக அரிசி மற்றும் ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ரேஷன் கடை முன்பாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.   

    சம்பவ மறிந்து வந்த தாசில்தார் குமரையா, வட்ட வழங்கல் அலுவலர் சம்பத், வருவாய் ஆய்வாளர் சிவசக்தி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு அரிசி வழங்குவதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை  கைவிட்டுகலைந்து சென்றனர். மேலும் உடனடியாக அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    ×