பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்பாட்டத்தில் மதுரை நகரில் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க வேண்டும்.
மதுரையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
மதுரையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
Published on

மதுரை

மதுரையில் மாநில அரசை கண்டித்து மாநகர் மாவட்ட பா.ஜ.க. மகளி ரணி, இளைஞரணி மற்றும் கூட்டுறவு பிரிவு சார்பில ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலா ளர்கள் ராஜ்குமார், பால கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்பாட்டத்தில் மதுரை நகரில் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் நடைபெறுகிற ஊழலை தடுத்த நிறுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி தலைவர் ஜூவா நகர் மீனா, இளைஞணி தலைவர் பாரிராஜா, கூட்டுறவு பிரிவு தலைவர் செந்தில்வேல் கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் பாஸ்கரன், மேற்கு மாவட்ட பார்வையாளர் ராஜரத்தி னம், மாவட்ட துணைத் தலைவர் வினோத்குமார், ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திரபாண்டியன், மணிமாலா உள்பட ஏராள மான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com