செய்திகள்

இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு

Published On 2018-07-05 07:31 GMT   |   Update On 2018-07-05 07:31 GMT
இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. #HelmetCase #MadrasHighCourt
சென்னை:

இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற சட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இன்று உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர் மற்றும் அமர்ந்து செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். கார்களில் பயணிப்போர் அனைவரும் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.



மேலும், சீட் பெல்ட் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி பிறப்பித்த சட்டத்தை அமல்படுத்தியது குறித்து தமிழக அரசு வரும் 27ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதவிர இருசக்கர வாகனங்களில் பகல் நேரங்களில் எல்இடி விளக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது குறித்து தமிழக அரசு சோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. #HelmetCase #MadrasHighCourt
Tags:    

Similar News