செய்திகள்

ஜெயலலிதாவை விமர்சித்த இளங்கோவன் மீதான அவதூறு வழக்கு ரத்து

Published On 2018-06-30 10:59 GMT   |   Update On 2018-06-30 10:59 GMT
முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்ட இளங்கோவன் மீதான அவதூறு வழக்கை நீதிபதி ஹேமலதா ரத்து செய்து உத்தரவிட்டார்.
சென்னை:

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 2013ம் ஆண்டு தாம்பரம் பேருந்து நிலையம் அருகே மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ஊழலைப் பற்றி ஜெயலலிதா பேசலாமா என்று கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா சார்பில் செங்கல்பட்டு கோர்ட்டில் மாவட்ட அரசு வக்கீல் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமலதா ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மனுவை ஏற்று அவதூறு வழக்கை ரத்து செய்தார்.

Tags:    

Similar News