செய்திகள்

பெண்களுக்கு பதவி உயர்வில் வேற்றுமை இருக்கக் கூடாது - சட்டசபையில் மசோதா தாக்கல்

Published On 2018-06-27 09:42 GMT   |   Update On 2018-06-27 09:42 GMT
வேலைக்கு தேர்ந்தெடுத்தல், பதவி உயர்வு ஆகியவற்றில் பெண்களுக்கு எதிரான வேற்றுமை அகற்றுவதற்கான சட்டத்திருத்த முன்வடிவை சட்டசபையில் அமைச்சர் தாக்கல் செய்தார்.
சென்னை:

சட்டசபையில் இன்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்திருத்த முன்வடிவை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுடைய பாதுகாப்புக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்து கொடுத்தால் இரவுப் பணிக்கு பெண்களை அனுமதிக்க முடியும். வேலைக்கு தேர்ந்தெடுத்தல், பயிற்சி, இடமாற்றம், பதவி உயர்வு ஆகியவற்றில் பெண்களுக்கு எதிரான வேற்றுமை இருக்கக் கூடாது. பெண் ஊழியர்களுக்கு எதிரான வேறுபாட்டை தடை செய்வதற்காக சில சட்டத்திருத்தங்களை கொண்டு வருவது அவசியமாக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News