செய்திகள்

கோர்ட்டு உத்தரவை மீறும் குமாரசாமி மீது தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்

Published On 2018-06-23 06:11 GMT   |   Update On 2018-06-23 06:11 GMT
கோர்ட்டு உத்தரவை மீறும் குமாரசாமி மீது தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் என்று விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார். #PRPandian #Kumaraswamy

மன்னார்குடி:

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் விவசாய பணிகள் தொடங்கி உள்ள நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் உரிமையை ரத்து செய்து, மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற்றுக் கொள்ள தமிழக கூட்டுறவுத் துறை உத்திரவிட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

உடன் அனைவருக்கும் நிபந்தனையின்றி தொடங்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கிட தமிழக அரசை வலியுறுத்துகிறோம். விவசாயிகளுக்க 4 சதவீத வட்டியில் தேசிய மயமாக்கப்பட்ட மாற்று வணிக வங்கிகள் நகை கடன் வழங்கும்போது, கூட்டுறவு வங்கிகள் மட்டும் 9.50 சதவீத வட்டி நிர்ணயம் செய்வது நியாயமல்ல. மேலும் உடன் இதனை அரசு கைவிட வேண்டும்.


கர்நாடக விவசாயிகளின் பாசனத்திற்குதான் தண்ணீர் திறக்க உத்திரவிடுவதை யாராலும் தடுக்க முடியாது என கர்நாடக முதல்வர் குமாரசாமி சாவல் விடுவதும், காவிரி ஆணைய உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வழங்க மறுப்பதும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும். இதனை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது. உடன் தமிழக அரசு குமாரசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். உடனடியாக ஆணைய கூட்டத்தை கூட்டி கர்நாடக அணைகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.

அணைகளுக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்கிடவும், பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு கர்நாடக, தமிழக அணைகளை பார்வையிட்டு ஆய்வு செய்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய நீர்வளத்துறை முன் வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #PRPandian #Kumaraswamy

Tags:    

Similar News