செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே மகளை குத்தி கொல்ல முயன்ற தந்தை

Published On 2018-06-02 10:05 GMT   |   Update On 2018-06-02 10:05 GMT
ஆண்டிப்பட்டி அருகே மகளை குத்திக் கொல்ல முயன்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள சடையால்பட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசக பெருமாள் (வயது 52). இவரது மனைவி ஜெயபாரதி (47). இவர்களுக்கு 10 வயதில் பெண் குழந்தை உள்ளது. சீனிவாசகபெருமாள் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டுக்கும் செலவுக்கு பணம் தராமல் இருந்து வந்துள்ளார். 

இதனால் ஜெயபாரதி தனது மகளுடன் அடிக்கடி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விடுவார். சம்பவத்தன்று பஸ் ஸ்டாப்பில் ஊருக்கு செல்வதற்காக நின்ற ஜெயபாரதியை அவரது கணவர் மறித்து தாக்கினார்.

மேலும் தனது மகளை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். இது குறித்து ஜெயபாரதி ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சீனிவாசக பெருமாளை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News