செய்திகள்

சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் 23-ந் தேதி நடக்கிறது

Published On 2018-05-21 14:39 GMT   |   Update On 2018-05-21 14:39 GMT
சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 23-ந் தேதி காலை 11 மணி அளவில் எடப்பாடியில் வைத்திலிங்கம் திருமண மண்டபத்தில் நடக்கிறது.

சேலம்:

சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 23-ந் தேதி காலை 11 மணி அளவில் எடப்பாடியில் வைத்திலிங்கம் திருமண மண்டபத்தில் அவைத்தலைவர் கோபால் தலைமையில் நடக்கிறது.

முன்னதாக அதே மண்டபத்தில் 9 மணிக்கு தி.மு.க. அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் கலைஞர் பிறந்த நாள் விழா, கழக ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் அனைத்து அணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறேன். 

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News