செய்திகள்

காவிரி மேலாண்மை வாரிய போராட்டத்திற்கு ஆதரவு- மணல் லாரிகள் 5-ந்தேதி ஓடாது

Published On 2018-04-03 13:44 GMT   |   Update On 2018-04-03 13:44 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 5-ந்தேதி எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக மணல் லாரி உரிமையாளர்கள் தலைவர் கூறியுள்ளார்.
நாமக்கல்:

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 5-ந்தேதி எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன ஆதரவு தெரிவித்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இதனால் தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் மணல் லாரிகள் ஓடாது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும்.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சுணக்கம் காட்டுவதை வன்மையாக கண்டிக்கிறோம். வாரியம் அமைக்க போராட்டம் நடத்தும் அனைத்து தரப்பினருக்கும் தொடர்ந்து மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Tags:    

Similar News