செய்திகள்

காச நோயாளிகளுக்கு மாதம் 500 ரூபாய் - புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்

Published On 2018-03-24 05:50 GMT   |   Update On 2018-03-24 05:50 GMT
தமிழகத்தில் காச நோயாளிகளுக்கு மாதம் 500 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
சென்னை:

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில் காச நோய் ஒழிப்பு தொடர்பான களப்பணிக்காக நடமாடும் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காசநோயை கண்டறிய ரூ.1 கோடியில் நவீன கருவிகளுடன் கூடிய இந்த வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



காசநோயாளிகளுக்கு மாதம் 500 ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் காசநோய் களப்பணியாளர்களுக்கு கையடக்க கணினிகளையும் அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசும்போது, காசநோயை ஒழிக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். மேலும்,  காசநோயாளிகளின் சத்துணவுக்காக மாதந்தோறும் 500 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் வழங்கப்படும் என்றும் கூறினார்.

‘காசநோய் இல்லாத உலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக நடமாடும் வாகனங்களில் மருத்துவர்கள் சென்று காசநோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க உள்ளனர்’ என்றார் முதலமைச்சர். #tamilnews
Tags:    

Similar News