செய்திகள்

தீக்குளிக்க முயன்ற ஆயுதப்படை காவலர்களுக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர் கோர்ட்

Published On 2018-03-23 10:56 GMT   |   Update On 2018-03-23 10:56 GMT
சென்னை டிஜிபி அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற ஆயுதப்படை காவலர்களுக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. #egmorecourt #suicidebid #grantedbail
சென்னை:

தேனி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த ஆயுதப்டை காவலர்கள் கணேஷ், ரகு ஆகிய இருவரும் நேற்று முன்தினம் சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வந்தனர். சாதி ரீதியாக பாகுபாடு காட்டி தங்களை இடமாற்றம் செய்ய உயர் அதிகாரிகள் முயற்சிப்பதாக கூறி மனு அளிக்க வந்ததாக அவர்கள் கூறினர். அப்போது திடீரென தங்கள் பையில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை திறந்து உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

அவர்களை சக காவலர்கள் தடுத்து நிறுத்தினர். கைது செய்யப்பட்ட அவர்கள் ஒருநாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், தற்கொலைக்கு முயன்ற இருவருக்கும் எழும்பூர் 13-வது நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உள்ளது. அவர்கள்  மீது தற்கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருவரின் நடவடிக்கை சரியில்லாததால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்ததாகவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேனி எஸ்.பி. கூறியது குறிப்பிடத்தக்கது. #tamilnews #egmorecourt #suicidebid #grantedbail
Tags:    

Similar News