செய்திகள்

ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் 21-ந்தேதி தொடர் மறியல் போராட்டம்

Published On 2018-02-18 10:41 GMT   |   Update On 2018-02-18 10:41 GMT
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கத்தினர் தலைநகர் சென்னையில் தொடர் மறியல் போராட்டம் வரும் 21-ந் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. #JactoGeo
சென்னை:

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ, புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி 21-ந் தேதி தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ - ஜியோ அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோரிக்கைகள் பலவும் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நிலையில், நமக்காக உரிமைகளை நாம் தொடர் போராட்டங்கள் மூலமாகவே பெற்று வந்துள்ளோம் என்ற கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், அரசு நமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் வரை தலைநகர் சென்னையில் தொடர் மறியல் போராட்டம் வரும் 21-ந் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைத்து துறைகளையும் சார்ந்த ஊழியர்கள் இந்த தொடர் மறியலில் பங்கேற்று உரிமைகளை பெறும் வரை போராடுவோம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார். #JactoGeo
Tags:    

Similar News