செய்திகள்

ரூ.19 கோடி செலவில் மெரினா-எலியட்ஸ் கடற்கரை மேலும் அழகுப்படுத்தப்படுகிறது

Published On 2018-01-05 10:01 GMT   |   Update On 2018-01-05 10:01 GMT
மெரினா, எலியட்ஸ் கடற்கரையை அழகுப்படுத்த புதுப்பிக்க ரூ.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னையில் மெரினா, எலியட்ஸ், நீலாங்கரை ஆகிய கடற்கரைகள் பொழுது போக்கு இடங்களாக உள்ளன.

குறிப்பாக மெரினா கடற்கரையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் திரள்கிறார்கள். காலை, மாலை வேளைகளில் நடை பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

மெரினா, எலியட்ஸ் கடற்கரையை மேலும் அழகுப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக நிதி ஒதுக்க கோரி சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டது.

இந்த நிலையில் மெரினா, எலியட்ஸ் கடற்கரையை அழகுப்படுத்த புதுப்பிக்க ரூ.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், மெரினா, எலியட்ஸ் கடற்கரையை மேம்படுத்த நிதி ஒதுக்கி அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கான டெண்டர் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் பயன்படுத்தும் வகையிலும் கடற்கரை பராமரிப்பு பணியில் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.

2014-ம் ஆண்டு நீலாங்கரை, கொட்டிவாக்கம் கடற்கரை மேம்படுத்த நிதி கோரப்பட்டது. அதுபற்றி அதிகாரிகள் கூறுகையில் அந்த திட்டம் இன்னும் கவனத்தில் இருக்கிறது என்றனர். #TamilNews
Tags:    

Similar News