செய்திகள்

பிளஸ்-2 பொதுத்தேர்வு: வர்த்தக கணித தேர்வுக்கு கால்குலேட்டர் கொண்டு வரலாம்

Published On 2018-01-03 22:27 GMT   |   Update On 2018-01-03 22:27 GMT
பிளஸ்-2 பொதுத்தேர்வில் வர்த்தக கணித தேர்வுக்கு கால்குலேட்டர் கொண்டு வரலாம் என அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
சென்னை:

பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி முடிவடைகிறது. இதில் கணிததேர்வு எழுதும் மாணவர்கள் ‘லாக்ரதம் டேபிள்’ புத்தகமும், ஜவுளி தொழில்நுட்பம் தேர்வு எழுதுவோர் ‘முழு கிராப் பேப்பரும்’ கொண்டுவர வேண்டும்.

இதேபோல் புள்ளியியல் தேர்வு எழுதுவோர் புள்ளியியல் டேபிளும், டிராப்ட்ஸ் மேன் தேர்வுக்கு சாதாரண ‘கால்குலேட்டரும்’, இயற்பியல், வேதியியல் தேர்வுகளுக்கு ‘லாக்ரதம் டேபிள்’ புத்தகமும் கொண்டு வர வேண்டும். இதேபோல் வர்த்தக கணித தேர்வு எழுதுவோர் சாதாரண கால்குலேட்டர் கொண்டு வரலாம்.

இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News